பரோட்டா பார்சலில் பாம்புத் தோல்!

image_pdfimage_print

கேரளாவில், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார்.

வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது