வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!

image_pdfimage_print

இலங்கையின் வடக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.

இது புயலாக மாறுமா என்பது அடுத்த இரு நாள்களுக்குப் பின்னரே கணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறும் பட்சத்தில் அது நகரும் திசையைப் பொருத்து இந்தியாவில் தென் மாநிலங்களில் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.