ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம்!

image_pdfimage_print

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் , வங்கிகள் என்பன மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.