க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image_pdfimage_print

2021 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை அனுமதி அட்டைகள், எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் மே 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை வரை சதாரணதரப் பரீட்சைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் சம்பந்தப்பட்ட பாடசாலை முதல்வர்களுக்கும், தனிநபர் பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தத்தமது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து, இம்மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை அனுமதி அட்டைகளை பெறாத பாடசாலைகள் மற்றும் தனிநபர் பரீட்சார்த்திகள், பரீட்சை திணைக்களத்தின் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.donets.lk  இல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு சிக்கல்கள் மற்றும் பிற பிரச்சினைகள் உள்ள மாணவர்கள் கீழே தரப்பட்டுள்ள இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம். 011-2784208, 011278453, 011-3188350 மற்றும் 011-3140314 அல்லது 1911  என்ற இலக்கங்களை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.