நாடளாவிய ஊரடங்கு சட்டம் நாளை வரை நீடிப்பு!

image_pdfimage_print

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள  ஊரடங்கு சட்டம் நாளை  புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.