கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளை ஒத்திவைக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜூன் மாதம் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.
குறித்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியாகிய தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது