புவி வெப்பநிலை அதிகரிக்கக்கூடுமென எச்சரிக்கை!

image_pdfimage_print

எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ்ஸினால் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் 50 சதவீதம் அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, 2022 முதல் 2026 வரையான காலப்பகுதியில், உலக நாடுகளில் அதிகளவான வெப்பநிலை பதிவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 தசாப்தங்களாக புவி வெப்பமடைதலானது கிரமமாக அதிகரித்து வருகிறது. மனித செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.