அனைத்து அரச பாடசாலைகளுக்கும், நேற்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை!

image_pdfimage_print

அனைத்து அரச பாடசாலைகளுக்கும், நேற்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின், இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முதலாம் தவணை விடுமுறை நேற்று முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு பின்னர் அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன.