வர வர கல்யாண வீட்டில நடக்குற அலப்பறை தாங்க முடியல… தாலி கட்டும்போது மணப்பெண் செஞ்ச வேலையைப் பாருங்க..!

மணப்பெண்

கல்யாண வீட்டில் மணப்பெண் செய்த ஒரு செயல் இணையத்தில் தீயாக பரவிவருகிறது. அப்படி என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கல்யாண வீடுகள் முன்பெல்லாம் பாரம்பர்ய கலாச்சாரத்துக்கே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் அதை கலர்புல் விசேசமாகவே மாற்றிவிட்டார்கள். அதேபோல் முன்பெல்லாம் செல்போன், வாட்ஸ் அப் பேஸ்புக் என பெரிய அளவில் தகவல் பரிமாற்றங்கள் இருந்தது இல்லை. இதனால் மணப்பெண்கள் தங்கள் தாய் வீட்டை நினைத்து பிரிந்து செல்வதை பெரிய சோகமான சம்பவமாக உணர்ந்தார்கள். ஆனால் இப்போது நிலமை அப்படியாக இல்லை.

தகவல் பரிமாற்றம் மிக எளிதாகி விட்டது. இதனால் திருமணம் இப்போதெல்லாம் ஜாலியாகிவிட்டது. அதிலும் திருமணத்தில் போட்டோ, வீடியோகிராபர்கள் செய்யும் சேட்டைகளும் கொஞ்சம், நஞ்சம் இல்லை. வித்தியாசமாக ஏதாவது செய்கிறேன் என்னும் பெயரில் அவர்கள் புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். மணமக்களை ஆடவைப்பது, நடிக்க வைப்பது, கலாட்டா செய்வது என சினிமா இயக்குனர்களுக்கே சவால்விடும் வகையில் யோசிக்கின்றனர். அந்தவகையில் இங்கே ஒரு வீடியோகிராபர் செய்த வேலை இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.

இதில், மணமகள் தனக்குக் கல்யாணமே வேண்டாம் என சொல்லி, மாலையை கழட்டிப்போட்டுவிட்டு செல்கிறார். மீண்டும் திரும்பிவந்து மாலையை போட்டுகொண்டு தாலிகட்ட உட்கார்கிறார். இதுக்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா? எனச் சொல்லும் அளவுக்கு இருக்கும் இந்த வீடியோவை இதோ இந்த இணைப்பில் பாருங்கள்.